அஜித்தின் இந்திய அளவிலான சாதனை... அடுத்தது உலக சாதனை தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித் ஒரு மிகச் சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு மிகச் சிறந்த பைக் பிரியர் என்பதும் அவர் உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ளார் என்பது தெரிந்ததே.
அதன் முதல் கட்டமாக இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டு ஒவ்வொரு பகுதியாக சுற்றுப்பயணம் செய்து வந்தார்.
இடையிடையே அவர் ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதன் பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் தனது பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தற்போது அவர் மேகாலய மாநிலத்தில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து முடித்து விட்டதாக தற்போது தகவல் கிடைத்து உள்ளது. இது திரையுலகிற்கு மட்டுமின்றி பைக் ரைடர்களுக்கும் ஒரு மிகப்பெரிய சந்தோஷமான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் அந்த சாதனையையும் விரைவில்அவர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#AK has completed Leg 1 of his world tour by riding through all the states in India. Quite an achievement considering the love he gets wherever he travels in India! Proud moment for all adventure riders. ????@SureshChandraa pic.twitter.com/LOm4Je82IP
— Suprej Venkat (@suprej) December 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments