நடுரோட்டில் பைக்கர்களுக்கு கிளாஸ் எடுத்த அஜித்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,March 20 2024]

நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டம் வைத்திருக்கிறார் என்பதும் அந்த திட்டத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தி விட்டார் என்பதும், விரைவில் முழுமையாக முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த அஜித் தற்போது படப்பிடிப்பு சிறிது காலதாமதமாவதை அடுத்து மீண்டும் பைக் டூருக்கு கிளம்பிவிட்டார் என்று வெளியான செய்தியை பார்த்தோம். மேலும் இது குறித்த புகைப்படம் வைரல் ஆனது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அஜித் தன்னுடன் எப்போதும் ஒரு பைக் டீமை அழைத்து செல்லும் நிலையில் அந்த டீமில் உள்ளவர்களுக்கு பைக் எப்படி ஓட்ட வேண்டும்? எப்படி ஓட்டக்கூடாது என்று கிளாஸ் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவு செய்து ’அஜித்தின் இன்றைய வகுப்பு’ என கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.