அஜித் அஜித் தான்: சென்னை விமான நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் நடிப்பை விமர்சனம் செய்பவர்கள் கூட அவருடைய மனிதநேயத்தை மதிப்பார்கள் என்பதும் அவருக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் அவருடைய மனிதாபிமானத்துடன் கூடிய நடத்தையால் தான் என்பதும் பலர் அறிந்ததே.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அஜித் விமான நிலைய ஊழியர்களிடம் நடந்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
அஜித் கடந்த சில வாரங்களாக ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித், சென்னை விமான நிலையத்தில் தனது லக்கேஜை எடுத்து கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விமான நிலைய ஊழியர்கள் அஜித்தை அழைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதனை அடுத்து அவர் உடனே அவர்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து அவர்களிடம் அஜித் கைகொடுத்தார். இதுகுறித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித் அஜித் தான் என்றும் அவருடைய மனிதநேயத்தின் உச்சகட்டமாக இந்த சம்பவம் பார்க்கப்படுவதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
KING Back To TAMILNADU ❤️??#AjithKumar #AK #AK61 ?? pic.twitter.com/JPGXl3xiLJ
— AK FANS COMMUNITY™ (@TFC_mass) July 22, 2022
#Ajith sir ❤️
— Ajith Network (@AjithNetwork) July 24, 2022
#AjithKumar #AK61 #AK pic.twitter.com/K8dTyv8sUQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments