பல மாதங்களுக்கு முன் கெட்டப் மாற்றிய அஜித்.. 'ஏகே 62' லுக் இதுதானா?

  • IndiaGlitz, [Wednesday,November 30 2022]

அஜித் கடந்த சில மாதங்களாக ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த படத்திற்காக நீண்ட தாடி வைத்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது கெட்டப்பை மாற்றி உள்ள அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது .

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’துணிவு’. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாக அஜித் தாடியுடன் இருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதால் அவர் தாடியை எடுத்து வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். அஜித் அடுத்ததாக ’ஏகே 62 படத்தின் படப்பிடிப்பில் அடுத்த மாதம் முதல் கலந்து கொள்ளஇருக்கும் நிலையில் தனது புதிய படத்திற்கான கெட்டப் இதுதானா? என்ற கேள்வி எழுந்தது.

அஜித்தின் ஸ்டைலிஸ்ட் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.