close
Choose your channels

அஜர்பைஜான் சென்றது இதற்குதானா? அஜித்தின் கார் ரேஸ் வீடியோ வைரல்..!

Saturday, June 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக அஜித்துக்கு உட்பட படக்குழுவினர் அனைவரும் சமீபத்தில் அஜர்பைஜான் சென்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் அஜர்பைஜானில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இந்த ஷெட்யூலுடன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து அஜர்பைஜானுக்கு அஜித் கிளம்பிய நிலையில் அவர் அஜர்பைஜான் சென்றதும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் திடீரென கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜர்பைஜானில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்தால் அவர் கார் ரேஸில் கலந்து கொள்கிறாரே என்றும் விஜய்யின் ’கோட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளதை அடுத்து அஜித் தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டாரா? என்றும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இருப்பினும் ’விடாமுயற்சி’ குறித்த எந்த அப்டேட்டும் இல்லை என்றாலும் அஜித் குறித்த ஏதாவது ஒரு வீடியோ அல்லது புகைப்படம் வெளியாகிறது என்று அஜித் ரசிகர்கள் திருப்தி அடைந்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இன்று முதல் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment