200 கிமீ வேகத்தில் பறக்கும் அஜித் கார்.. த்ரில் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

நடிகர் அஜீத் தற்போது அஜர்பைஜான் நாட்டில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் அதில் அந்தரத்தில் அஜித் மற்றும் ஆரவ் காரில் இருக்கும் நிலையில் அந்த கார் சுழன்று சுழன்று வந்த காட்சி படமாக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

அதுமட்டுமின்றி அவ்வப்போது அவர் கார் ரேஸில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்றுமுன் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் துபாயில் கடந்த 21 ஆம் தேதி அஜித் ரேஸ் காரை வேகமாக கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அஜித் பாதுகாப்பு உடைகள் மற்றும் ஹெல்மெட் அணிந்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்வதும், கார் சுமார் 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் காட்சியும் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பிலிருந்து அஜித் வந்ததும் ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.