சென்னை டு மதுரை 2 மணி நேரம் தான்.. 234 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய தல அஜித்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜீத் 234 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வேகத்தில் சென்றால் சென்னையில் இருந்து மதுரைக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் அஜித் கார் ஓட்டுவதில் வல்லவர் என்பதும் பல கார் ரேஸ்களிலும் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் உலகம் முழுவதும் பைக் மற்றும் காரில் சுற்ற வேண்டும் என்பதுதான் அவரது வாழ்நாள் கனவு என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் மாறி மாறி அஜித் நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது கார் ரேஸ்களுக்கான பயிற்சி பெறுவது, ரேசுக்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டி பார்ப்பது ஆகிய விஷயங்களில் அஜித் ஈடுபட்டு வருகிறார் என்பதும் இது குறித்த வீடியோ மூலம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அஜித் புதிய கார் வாங்கியுள்ள நிலையில் அந்த காரில் அவர் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வேகமாக பரவி வருகிறது. இவ்வளவு வேகத்தில் கார் சென்ற போதிலும் அசால்டாக தைரியமாக அஜித் காரை ஓட்டி சென்றதை பார்த்து பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த வீடியோ வெளிநாட்டில் தான் எடுக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் இந்த வேகத்தில் காரில் தமிழ்நாட்டில் சென்றால் சென்னையில் இருந்து மதுரைக்கு இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
Exclusive : Video Of Our CHIEF #Ajithkumar 😎 #RacingLife🏎️💪#VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/7flTirVugu
— Kannan Pandian (@Kannan_1363) August 28, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments