close
Choose your channels

'விடாமுயற்சி' படப்பிடிப்பு முடிந்து சென்னை கூட வரவில்லை.. அதற்குள் ரூ.9 கோடி செலவு செய்த அஜித்..!

Wednesday, July 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாக அஜித் நடித்த ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது என்பதும் அஜித், அர்ஜுன், ஆரவ், த்ரிஷா உள்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இடையில் அஜித் மனைவி ஷாலினிக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை நடந்த நிலையில் சென்னை திரும்பிய அஜீத், அதன் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜர்பைஜான் சென்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ’விடாமுயற்சி’ படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது.

ஆனால் அஜித் மட்டும் சென்னை திரும்பாமல் நேராக அங்கிருந்து துபாய் சென்றதாகவும் துபாயில் அவர் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி காரை வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது. புதிதாக வாங்கிய ஃபெராரி காருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாகவும் அதேபோல் ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் விரைவில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment