ஏகே மோட்டோ ரைடு நிறுவனத்திற்காக கோடிக்கணக்கில் பைக் வாங்கும் அஜித்.. ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,June 06 2023]

நடிகர் அஜித் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தை தொடங்கிய நிலையில் அந்த நிறுவனத்திற்கு அவர் கோடி கணக்கில் மதிப்பிலான பைக்குகளை வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித் திரைப்படங்களில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் உலக அளவில் பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்த புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏகே மோட்டார் ரைடு என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் தொடங்கி இருப்பதாக அஜித் அறிவித்திருந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் பைக்குகளை வாடகைக்கு எடுத்து உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனது நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள பைக்குகளை வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் தனது நிறுவனத்திற்கு இதுவரை 8 பைக்குகளை ஆர்டர் செய்திருப்பதாகவும் இந்த பைக்குகள் ஒவ்வொன்றின் விலை ஒரு கோடிக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பைக்குகளுக்கு வாடகையாக 8 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க அஜித் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விலையுயர்ந்த பைக்குகளை வாங்கியிருப்பதன் மோட்டார் பைக் சுற்றுப்பயணம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு அஜித்தின் நிறுவனம் மிகச் சிறந்த வகையில் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.