இளம்பெண்ணின் தலையில் கைவைத்து ஆசி செய்த அஜித்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித்குமாரின் மனிதநேயம் குறித்து பல தகவல்களை கேள்விப்பட்டிருக்கிறோம் என்பதும் அதேபோல் பெண்கள் மீது அவர் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.
இந்த நிலையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக அஜித் தற்போது திருச்சியில் உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது தன்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையில் கைவைத்து அவர் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசி செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் அஜித் ‘வேதாளம்’ படத்தில் பேசிய வசனமான ‘பெண்கள் எல்லோரும் ஸ்கூலுக்கு போகட்டும், காலேஜூக்கு போகட்டும், வேலைக்கு போகட்டும், நிம்மதியா இருக்கட்டும்’ என்ற வசனம் ஒலிக்கின்றது.
பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் அஜித்தின் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.
#PeoplesHeroAJITHKUMAR
— MALAYSIA AJITH FAN CLUB ® (@Thalafansml) July 27, 2022
The way be blessed his female fan ❤️#AK61 || #AjithKumar pic.twitter.com/aKVJG8ztLz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com