அஜித் பிறந்த நாளில் 3 அப்டேட்டுக்கள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து..!

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி 3 அப்டேட்டுகள் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு அன்றைய தினம் செம விருந்து காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

அஜித் பிறந்த தினம் மே 1ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ’விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இன்னும் ஒரு சில நாட்களில் ’விடாமுயற்சி’ படக்குழுவினர் அஜர்பைஜான் புறப்படுவதாகவும் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அஜித்தும் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

அதே போல் அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி 'பில்லா’ ’தீனா’ ஆகிய இரண்டு படங்கள் ரீரிலீஸ் ஆக இருப்பதாகவும் இந்த படங்கள் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’விடாமுயற்சி’ படத்தை அடுத்து அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் அஜித் பிறந்தநாளில் மூன்று அப்டேட்டுகள் காத்திருக்கிறது என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி அஜித் தனது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்துடன் கொண்டாடும் நிலையில் இந்த ஆண்டும் குடும்பத்துடன் கொண்டாடும் புகைப்படங்கள் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.