அஜித்தின் வேர்ல்ட் பைக் டூர்.. எந்த நாட்டில் இருக்கிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 22 2023]

நடிகர் அஜித் ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் உலக அளவில் பைக் சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார் என்பதை அவ்வப்போது அவர் பல நாடுகளில் பைக்கில் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு தாமதம் ஆகி வரும் நிலையில் அவர் மீண்டும் தனது பைக் டூரை ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோக்களில் இருந்து அவர் நேபாளத்தில் இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

நேபாளில் உள்ள பொகாரா என்ற நகரில் அஜித் பைக்கில் செல்லும் காட்சிகள் மற்றும் தனது ரசிகரின் வீட்டில் இருக்கும் காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. . இதனை அடுத்து அவர் தற்போது நேபாளத்தில் தான் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரு மாதத்தில் திருமணமா? நடிகை ஷெரின் வீடியோ வைரல்..!

நடிகை ஷெரின் சமீபத்தில்  ரசிகர் ஒருவரிடம்  சமூக வலைத்தளத்தில் உரையாடிய போது உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று

'விடுதலை' முதல் பாகத்தில் 20 நிமிட காட்சிகள் இணைக்கப்படுகிறதா? 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகத்தில் 20 நிமிட காட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

மாளவிகா மோகனின் வேற லெவல் வொர்க்-அவுட்: வைரல் புகைப்படங்கள்..!

நடிகை மாளவிகா மோகனன் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

'தங்க மீன்கள்' குழந்தை நட்சத்திரம் சாதனாவா இவர்? இளம் குமரியாக வைரல் புகைப்படங்கள்..!

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான 'தங்க மீன்கள்' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

மணிரத்னம் - கமல் படத்தில் நயன்தாராவை அடுத்து இந்த பிரபல நடிகையுமா? எகிறும் எதிர்பார்ப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது