அஜித்தின் அட்டகாசமான பைக் பயண வீடியோ: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Thursday,October 28 2021]

தல அஜித் கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் அவர் பயணம் செய்யும் போது இடையிடையே எடுக்கப்படும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் அஜித்துடன் ரசிகர்கள் மற்றும் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் பாலைவனத்தில் அஜித் பைக்கில் உட்கார்ந்து இருக்கும் போது எடுத்த புகைப்படம் மற்றும் மலை உச்சியில் அஜித்குமார் நின்று கொண்டிருந்த போது எடுத்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வட இந்தியாவின் ஒரு பகுதியில் அஜித் பைக் ரைட் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. உலக பைக் பயணத்தின் பயிற்சியாக அஜித் தற்போது வட இந்தியாவில் பைக் பயண பயிற்சி செய்து வருவதாகவும் விரைவில் அவர் உலக அளவில் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர். அஜித்தின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.