ஹெலிகாப்டரை இயக்கும் பைலட் அஜித்.. வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் ’ஏகே 61’ படத்தின் செய்திகளை விட அஜித் பைக் பயணம் செய்து வரும் செய்திகள்தான் அதிகமாக இணையதளங்களில் வைரலாக வருகின்றன .
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லண்டன் உள்பட பல வெளிநாட்டு நகரங்களில் பைக் பயணம் செய்த அஜீத் தற்போது இந்தியாவுக்கு திரும்பிய போதிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். தற்போது அவர் லடாக் உள்ளிட்ட இடங்களில் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும், இந்த பயணத்தில் மஞ்சுவாரியர் உள்பட அவரது குழுவினர்களும் இணைந்து பயணம் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அஜித்தின் பைக் பயண செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அஜித் ஹெலிகாப்டரை இயக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் அஜித் தான் என்ற நிலையில் அவர் ஹெலிகாப்டரை இயக்கும் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு அஜித், அடுத்த கட்டமாக வேறொரு சுற்றுப்பயணம் செல்வாரா? அல்லது ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#AjithKumar #Helicopter pic.twitter.com/3M0IHmNk3p
— Suprej Venkat (@suprej) September 13, 2022
#AjithKumar pic.twitter.com/fE8Wn8ExsB
— Suprej Venkat (@suprej) September 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments