கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை: அஜித்தே எழுதிய நன்றிக்கடிதம்!

  • IndiaGlitz, [Friday,April 01 2022]

அஜித் நடிக்க இருக்கும் ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளது என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை அண்ணாசாலை செட், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஜித் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதையும் அங்கு உள்ள கோவில் ஒன்றில் அதிகாலையில் அஜித் சுவாமி தரிசனம் செய்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜீத் தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் இருக்கும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அஜித் சிகிச்சை பெற்றதாகவும் அவருடைய அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைப்பதற்காக இந்த சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது .

கேரளாவில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் எழுதிய கடிதம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

யானையுடன் 'பீஸ்ட்' ஜாலியோ ஜிம்கானோ பாடலுக்கு நடனமாடிய நடிகை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே .

ரூ.15 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறியது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் போட்டியில் இருந்து ஒருவர் வெளியேற பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. ரூபாய் 3 லட்சத்திலிருந்து ஆரம்பித்த

சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் அபிராமி: என்ன காரணம்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்புவிடம் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தனுஷூடன் மீண்டும் இணைந்த 'அசுரன்' நடிகர்!

தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மீண்டும் தனுஷின் 'வாத்தி' படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிவகார்த்திகேயன் பல உண்மைகளை மறைத்துவிட்டார்: பதில் மனு தாக்கல் செய்த ஞானவேல்ராஜா!

 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்ததற்காக ரூபாய் 4 கோடி சம்பள பாக்கி இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்த நிலையில்