அஜித்துக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ் உள்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் அஜித் ஏரோ மாடலிங்கில் கவனத்தை திருப்பியுள்ளார் என்பதும் இது தொடர்பான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சென்று வந்தார் என்றும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் எம்.ஐ.டி என்ற மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லுரி ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் ஆளில்லா விமான அமைப்பின் ஆலோசகராக அஜித்தை நியமனம் செய்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பெரும்பாலான மாஸ் நடிகர்கள் நடிப்பு தொழிலை அடுத்து அரசியலை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நிலையில் அஜித் மட்டும் வித்தியாசமான துறையில் ஆர்வம் காட்டி வருவதே அவருடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க காரணமாக இருப்பதாக கோலிவுட் திரையுலகம் கூறுகின்றது.
 

More News

கமல் கட்சியின் முதல் விசில் இதுதான்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தேசிய விருது புறக்கணிப்பு குறித்து பாரதிராஜா

சமீபத்தில் திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு வெறும் நான்கே விருதுகள் மட்டுமே கிடைத்தது.

விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்?

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சூசன் என்பவரை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ரிஹான், ரிதான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

அஜித் உதவி செய்தாரா? இல்லையா? மாறுபட்ட கருத்துக்களால் குழப்பம்

அஜித் யாருக்கும் தெரியாமல் செய்த உதவிகள் பல என்றும், அந்த உதவிகள் ஒருசில ஆண்டுகள் கழித்து உதவி பெற்றவர்களே கூறும்போதுதான் அது வெளியுலகிற்கு தெரிய வரும் என்றும் கூறப்படுவதுண்டு.

மே தினத்தில் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, மைதானத்தில் பேட்ஸ்மேனாக ஆக்ரோஷமாகவும், கேப்டனாக கூலாகவும் செயல்படுவதால் தான் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது.