மூன்றாவது முறையும் அஜித்துக்கு 'V'ஐ கொடுப்பாரா சிவா?

  • IndiaGlitz, [Saturday,July 09 2016]

அஜித் நடிக்கவுள்ள 'தல 57' படத்தின் பூஜை மிக எளிமையாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் சிறுத்தை சிவா அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வருகிறார்.
முதல்கட்ட படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே இந்த படத்தின் டைட்டில் மற்றும் அஜித் ஜோடியாக நடிக்கும் நடிகை ஆகியவற்றை முடிவு செய்துவிட வேண்டும் என்பதில் அவர் தற்போது தீவிரமாக உள்ளார்.
இந்த படத்தின் நாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் இல்லாததை அடுத்து காஜல் அகர்வால் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து சிவா தனது உதவியாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். 'வீரம்', 'வேதாளம்' போலவே இந்த படத்தின் முதல் எழுத்தும் 'V'யில் தொடங்க வேண்டும் என்பதில் சிவா தீவிரமாக உள்ளாராம். 'V'என்றால் வெற்றி என்று கூறும் வகையில் இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்பதே படக்குழுவினர்களின் கருத்தாக உள்ளது.

More News

ஜி.வி.பிரகாஷ்: முதலில் இசையமைப்பாளர், பின்னர் நடிகர் தற்போது இயக்குனர்?

கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ், 'டார்லிங்' படத்தின் மூலம் நடிகரானார்.

அஜித்துடன் முதல்முறையாக இணையும் பிரபல நடிகை

அஜித்தின் அடுத்த படமான 'தல 57' படத்தின் பூஜை எளிய முறையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

சூப்பர் ஸ்டார் 'கபாலி'யும் புரமோஷன் சூப்பர் ஸ்டார் தாணுவும். ஒரு பார்வை

சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றால் விளம்பரமே தேவையில்லை. ரஜினி நடிக்கின்றார் என்ற தகவலே மிகப்பெரிய புரமோஷனாக இருந்து வரும் நிலையில் 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் செய்யும் பிரமாண்டமான புரமோஷன்கள் இந்த படத்தை உலக அளவில் பேச வைத்துவிட்டது.

தமிழ்த்திரையுலகின் பிதாமகன் கே.பாலசந்தரின் 86வது பிறந்த தின சிறப்பு பகிர்வு

தமிழ் திரையுலக இயக்குனர்களின் குரு, இயக்குனர் சிகரம், மூன்று தலைமுறை நடிகர்களை இயக்கி சாதனை படைத்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களுக்கு இன்று 86வது பிறந்த நாள்.

முதல் மூன்று நாட்களில் 'சுல்தான்' செய்த வசூல் சாதனை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடிப்பில் கடந்த 6ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான 'சுல்தான்' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு மூன்றே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.