அஜித்தை ஆத்திரப்பட வைத்த 'அஜித் 57' குழுவினர்
Thursday, September 22, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் ஹீரோக்களில் அஜித் மிகவும் அமைதியானவர், படக்குழுவினர்களிடம் மிகவும் அன்பாக பழகுபவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரையே 'அஜித் 57' படக்குழுவினர் ஆத்திரமடைய வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் 'அஜித் 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பு நடந்தபோதிலும் படப்பிடிப்பு புகைப்படங்களுடன் ஆஸ்திரிய பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டது.
அந்த பத்திரிகைக்க்கு புகைப்படங்கள் எப்படி கிடைத்தது என்று அஜித் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் புரியாத புதிராக இருக்கும் நிலையில் இதற்கு பாதுகாப்பு ஏற்பாடு குறைபாடுதான் காரணம் என்பது தெரியவந்தது.
இதனால் படக்குழுவினர்களின் பாதுகாப்பு குழுவினர் மீது அஜித் ஆத்திரப்பட்டதாகவும், இனியொருமுறை இதுபோன்ற தவறு எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்படக்கூடாது என்று அவர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments