ரசிகர்கள் மோதிக்கொண்டாலும் அஜித்-விஜய்யின் உண்மையான நட்புக்கு அடையாளம் இதுதான்.. என்ன ஒரு பாசம்..!

  • IndiaGlitz, [Sunday,March 10 2024]

சமூக வலைதளத்தை திறந்தாலே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்ளும் பதிவுகள் தான் அதிகம் இருக்கும் என்பதும் சில சமயம் அநாகரிகமாக மிக மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்வார்கள் என்பதும் பல ஆண்டுகளாக இருக்கும் வழக்கமாக உள்ளது.

ஆனால் அஜித், விஜய் ஆகிய இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதும் ஒருவரை ஒருவர் குடும்பத்துடன் அவ்வப்போது சந்தித்து தங்கள் நட்பை நிரூபித்து வருகின்றனர் என்பதும் இரு தரப்புக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித்துக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

இந்நிலையில் அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தளபதி விஜய், அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் உடல் நிலையை பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

என்னதான் அஜித், விஜய் தொழில் அளவில் போட்டியாளர்களாக இருந்தாலும் அஜித்தும் விஜய்யும் நீண்ட நாட்களாக நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.