அஜித், விஜய் இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: வைரலாகும் மோசமான ஹேஷ்டேக்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த பல ஆண்டுகளாக அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்றாலும் தற்போது அவர்கள் மோதிக் கொள்வது மிகவும் அநாகரீகமாக இருப்பதாக திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த மோதலை அஜித் விஜய் ஆகிய இருவரும் தலையிட்டு நிறுத்தாவிட்டால் சமூக வலைதளம் ஒரு குப்பைக்கிடங்காக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக அஜித் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மிக மோசமான பதிவுகளை செய்து வருகின்றனர். RIPJosephVijay என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்களும், Aids_Patient_Ajith என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்களும் பதிவு செய்து அதில் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட கேவலமான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். அஜித், விஜய் ஆகிய இருவரின் குடும்பத்தினர் குறித்தும் மோசமான பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பதிவுகள் எல்லை மீறி இருப்பதாகவும், இதனை உடனே அஜித்-விஜய் இருவருமே தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திரையுலகினர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். ஒரு நடிகருக்கும் இன்னொரு நடிகருக்கும் இடையே போட்டி இருக்கலாம், ரசிகர்களிடையே கருத்து மோதலும் இருக்கலாம், ஆனால் அது எல்லை மீறக் கூடாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
I kindly request @actorvijay avl / #ajithkumar avl 2step in give a statement ending this social war Vomiting in the name of love. Misusing ur names images n wasting time n creating a culture.
— vasuki bhaskar (@vasukibhaskar) March 26, 2022
This has to
STOP
or we are allowing a next generation from turning into antisocials.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com