close
Choose your channels

ஒரே நாளில் ரீ ரிலிஸ் ஆகும் அஜித் மற்றும் அஜித்தின் மனைவி படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் விருந்து..!

Wednesday, February 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் விருப்பத்துக்குரிய நடிகரின் படத்தை வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். இந்த நிலையில் அஜித், விஜய்யின் பழைய படங்கள் ஒரே நாளில் ரீரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இரண்டு படங்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஒன்று அஜித் படம், இன்னொன்று விஜய்க்கு ஜோடியாக அஜித் மனைவி ஷாலினி நடித்த படம் என்பதுதான் அதற்கு காரணம்

ஆம், அஜித் நடித்த ’வாலி’ மற்றும் விஜய் நடித்த ’காதலுக்கு மரியாதை’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளன. கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ’வாலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சிம்ரன் மற்றும் ஜோதிகா ஹீரோயின்களாக நடித்திருந்த இந்த படம் அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம்

அதேபோல் விஜய், ஷாலினி நடிப்பில், பாசில் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ’காதலுக்கு மரியாதை’. 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். இந்த இரண்டு படங்களும் கமலா திரையரங்கில் வரும் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதை அடுத்து அஜித், விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர், குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு டபுள் விருந்தாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment