மீண்டும் ஒரே நாளில் மோதும் அஜித்-விஜய் படங்கள்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

அஜித், விஜய் படங்கள் ரிலீஸ் தினம் என்றால் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்று இருக்கும் என்பது தெரிந்ததே. அதிலும் அஜித், விஜய் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். வரும் தீபாவளி தினத்தில் அஜித்தின் 'விசுவாசம்' படமும் விஜய்யின் 'தளபதி 62' படமும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அதற்கு முன்பே அஜித், விஜய் படங்கள் தற்போது ஒரே நாளில் வெளியாகவுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வரும் நிலையில் புதிய படங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான அஜித், விஜய் படங்கள் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் மீண்டும் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அஜித்தின் வேதாளம், விஜய்யின் மெர்சல், விஜய்சேதுபதியில் விக்ரம்வேதா உள்ளிட்ட ஒருசில படங்கள் சென்னையில் மறுவெளீயிட்டாக திரையிடப்படவுள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் க்யூப் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் விரைவில் பேசி தீர்க்கப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News

நாச்சியார் தெலுங்கு ரீமேக்கில் நம்பர் ஒன் நடிகை?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படம் மூன்றாவது வாரமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது

கார்த்தியின் மெகா பட்ஜெட் படத்தின் முக்கிய அறிவிப்பு

கார்த்தி ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று'; திரைப்படம் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் இணையும் படத்தின் அறிவிப்பு .

அஜித்துக்கு முதல்முறை, நயனுக்கு 3வது முறை: விசுவாசம் அப்டேட்

தல அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி: துபாயில் மரணம், மும்பையில் தகனம், தமிழகத்தில்....?

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் எதிர்பாராத வகையில் திடீரென மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினர் மட்டுமின்'றி ரசிகர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.

தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளின் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு

சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி மிக வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.