'பீஸ்ட்' vs 'வலிமை' :7 ஆண்டுகளுக்கு பின் மோதும் விஜய்-அஜித் படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,September 22 2021]

7 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என சற்று முன்னர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எனவே அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித்தின் ’வலிமை’ மற்றும் விஜய்யின் ’பீஸ்ட்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித் நடித்த ’வீரம்’ மற்றும் விஜய் நடித்த ’ஜில்லா’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரே நாளில் அஜீத், விஜய் படங்கள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்-விஜய் ஆகிய இரு தரப்பு ரசிகர்களுக்கும் அடுத்த ஆண்டு பொங்கல் தினம் சிறப்பு தினமாக இருக்கும் நிலையில் இந்த போட்டியில் வெல்பவர் தலயா? தளபதியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கையில் சரக்கு பாட்டிலுடன் பார்ட்டி பண்ணிய தமிழ் நடிகை… வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அமலாபால். இவர் “மைனா“

19 வருட கனவு நனவாகியது… இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்ட நடிகர் ஜெய்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் ஈர்த்த நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெய்.

'வலிமை' ரிலீஸ் தேதியை அறிவித்தார் போனிகபூர்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என்றும் கிறிஸ்மஸ் தினத்தில் வெளிவரும் என்றும் பல செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் 'வலிமை'

குழந்தை டயப்பருடன் பஞ்சாப் அணியை மோசமாக ஒப்பிட்ட முன்னாள் வீரர் … என்ன காரணம்?

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பஞ்சாப் கிங்ஸ் அணியை பார்த்து “குழந்தை கூட தனது டயப்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காது“

விஜய்சேதுபதியிடம் இருந்து அதிகம் கற்று கொண்டேன்: பிரபல கிரிக்கெட் வீரர்!

விஜய் சேதுபதியிடம் இருந்து அதிகம் கற்றுக் கொண்டதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.