அஜித், விஜய் ரகசிய சந்திப்பு நடந்ததா? 

  • IndiaGlitz, [Monday,March 21 2022]

அஜித், விஜய் ஆகிய இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும் அவ்வப்போது குடும்பத்துடன் சந்திப்பு நடக்கும் என்றும் செய்திகள் வெளியானது வருவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் ரகசிய சந்திப்பு நடந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் போது அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவர் மட்டுமே தனியாக சில மணி நேரம் சந்தித்து பேசியதாகவும் இந்த சந்திப்பில் இருவரும் சில முக்கிய முடிவுகள் எடுத்ததாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது உதவியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கூட உடன் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் ஒரு பக்கம் அரசியலை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், அதற்கு நேர்மாறாக அஜித் அரசியலில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அஜீத் விஜய் சந்திப்பு பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.