டுவிட்டரில் கெத்து காட்டிய அஜித்-விஜய்!

  • IndiaGlitz, [Monday,August 23 2021]

அஜித், விஜய் மற்றும் அவர்கள் நடித்து வரும் படங்களின் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் கெத்து காட்டி உள்ள தகவல்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

டுவிட்டர் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிக டுவிட்டுகள் பதிவான ஹேஷ்டேக்குகள் குறித்த புள்ளிவிவரங்களை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் ஐந்து இடங்கள் அஜீத்-விஜய் மற்றும் அவர்களது படங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதளங்களில் குறிப்பாக ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருக்கும் என்பது தெரிந்ததே. அஜித்-விஜய் குறித்த திரைப்படங்கள் மற்றும் தகவல்கள் டுவிட்டரில் பதிவாகி மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தேசிய அளவில் மட்டுமின்றி ஒருசில ஹேஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் அதிக அளவில் டுவிட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகள் பட்டியலில் அஜித் விஜய் மற்றும் அவர்கள் நடித்த படங்கள் ஐந்து இடம்பெற்றுள்ளன/ அவஒ பின்வருமாறு:

1. #Valimai

2. #Master

4. #AjithKumar

5. #Thalapathy65

10. #VakeelSaab