பாடை கட்டிய அஜித்-விஜய் ரசிகர்கள்: டுவிட்டர் இணையதளத்தில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்-விஜய் ரசிகர்கள் டுவிட்டர் இணையதளத்தில் மோதிக் கொள்வது என்பது தினமும் நடைபெறும் ஒரு வழக்கமான செயல் என்பது டுவிட்டரை தினமும் கவனித்து வரும் நபர்களுக்கு தெரிந்ததே
இந்த நிலையில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வெளியாகும் ஆகஸ்ட் 8ஆம் தேதியை குறிப்பிட்டு #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் ரசிகர்கள் #RIPactorVIJAY என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்
இரண்டு ஹேஷ்டேக்குகளும் மாறி மாறி டிரெண்ட் ஆகி வந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜய் ரசிகர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். இதனை அடுத்து மனம் மாறிய அஜித் ரசிகர்கள் தற்போது #LongLiveVijay என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் டுவிட்டரில் இந்த இரண்டு நாட்களும் டிரெண்டில் இருந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டுவிட்டர் சமூக வலைத்தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதை தவிர்த்து, இரு தரப்பின்கர்களும் சமூக பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் அதன் தாக்கம் ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments