ரஷ்யாவில் போனிகபூருடன் அஜித்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,September 05 2021]

’வலிமை’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக தல அஜித் மற்றும் படக்குழுவினர் ரஷ்யா சென்று இருந்தார்கள் என்பதும் அங்கு ஒரு சில நாட்கள் ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளை படமாக்கி விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

ஆனால் அதே நேரத்தில் அஜித் இன்னும் ரஷ்யாவில் தான் இருக்கிறார் என்பதும் அவர் உலகம் சுற்றும் அஜித்தாக மாறி பைக்கிலேயே ரஷ்யா உட்பட உலகை சுற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்காக அவர் ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் இருந்தன

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ரஷ்யா சென்று அஜீத்தை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக ஆயுத பூஜை தினத்தில் ’வலிமை’ படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் தேதியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.