அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆகும் அஜித், சிம்பு படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Thursday,March 11 2021]

அடுத்தடுத்த வாரங்களில் அஜித் மற்றும் சிம்பு நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்தது என்பதும் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்யின் ‘மாஸ்டர்’ தவிர வேறெந்த திரைப்படத்திற்கும் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் பெரிய அளவில் வரவில்லை என்பது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் பாதிப்பு பயம் ஒரு புறம் இருந்தாலும் ஓடிடியில் புதிய படங்கள் ரிலீஸ் ஆவதால் தான் திரையரங்கிற்கு வரும் கூட்டம் குறைந்து விட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்க ஏற்கனவே ஹிட்டான மாஸ் நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் தயார் செய்து ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடித்த ’பில்லா’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அந்த வகையில் அடுத்த வாரம் சிம்பு நடித்து இயக்கிய ’மன்மதன்’ என்ற திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி உள்ளனர். சிம்பு ஜோடியாக ஜோதிகா நடித்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பதும் சிம்பு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

எப்படியாவது ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்க திரையுலகினர் எடுக்கும் முயற்சிகள் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'சாணிக்காகிதம்' புதிய ஸ்டில்: டெர்ரராக இருக்கும் செல்வராகவன்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படமான 'சாணிக்காகிதம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்தது என்பதும்

வில்லாய் வளைந்து போஸ் கொடுத்த ரஜினி மகள்: வைரல் புகைப்படம்!

ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் , '3' மற்றும் 'வை ராஜா வை' போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பதும் தற்போது அடுத்த படத்திற்காக அவர் தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்!

இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீட் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்- தமிழக முதல்வர் வேண்டுகோள்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர்

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன.