ஸ்பெயின் தெருவில் ஜாலி வாக்கிங் செய்த அஜித் - ஷாலினி.. ரொமான்ஸ் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித் தற்போது படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு, ஸ்பெயின் தெருக்களில், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி நடந்து செல்லும் செல்பி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் "விடாமுயற்சி" மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் "குட் பேட் அக்லி; ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பில் மாறி மாறி கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், ஸ்பெயினில் படப்பிடிப்பில் இருக்கும் அஜித், தனது மனைவியையும் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் ஜாலியாக நடந்து செல்லும் அந்த செல்ஃபி வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "காதலருடன் இருப்பதற்கான அற்புதமான இடம்" என்று கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று, ஷாலினி தனது மகனுடன் கால்பந்து போட்டியை ரசித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இன்றோ, அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக, "உன்னோடு வாழ்ந்த வாழ்வென்ன வாழ்வு" பாடல் வரிகளை ரசிகர்கள் கமெண்டாக பதிவு செய்து வருகின்றனர்.
Thala With Shalani mam latest video ❤️❤️❤️😍😍😍#Ajith #Thala #AK #VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/f439hZkmsO
— #என்றும்_அஜித்குமார் (@ThalaPrabu0708) October 7, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com