அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படங்கள்.. குவியும் லைக்ஸ்..!

  • IndiaGlitz, [Monday,March 20 2023]

நடிகர் அஜித் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் இந்த சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்களை ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கால்பந்து மைதானத்தில் மகனுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் மகன், மகளுடன் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை ஷாலினி அஜித் பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்தன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் உடன் ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். நடுக்கடலில் படகில் இருப்பது போன்று உள்ள இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

'குற்றப்பரம்பரை' படத்தில் விஜய்காந்த் மகன்? இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் தயாரிக்க பலர் முயற்சி செய்தனர் என்பது தெரிந்ததே.

அகநக அகநக முக நகயே.. 'பொன்னியின் செல்வன் 2' பாடல் ரிலீஸ்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது

வெற்றிமாறனின் 'விடுதலை' ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த 'விடுதலை' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது

கம்பீரமாக குதிரை சவாரி செய்யும் இயக்குனர் ஷங்கர்.. மாஸ் புகைப்படம்..!

 பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் ராம்சரண் தேஜா நடித்துவரும் 'ஆர்சி 15' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார் என்பதும் இரண்டு படங்களின்

'சூர்யா 42' டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது? செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!

 சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என