திருமண நாளில் அஜித்-ஷாலினியை தவிக்க விட்ட செல்போன் நிறுவனங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று அஜித்-ஷாலினியின் திருமண நாள் மற்றும் சச்சின் தெண்டுல்கரின் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அவரவர் துறையில் மாஸ் காட்டியவர்கள் என்பதால் நேற்று சமூக வலைத்தளங்களில் கோடானு கோடி வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்த நிலையில் அஜித் தற்போது பல்கேரிய படப்பிடிப்பில் இருப்பதால் திருமண நாளை நேரில் கொண்டாட முடியாத நிலை. இருப்பினும் செல்போனில் வீடியோ கால் மூலம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாறிகொள்ள முயற்சி செய்தனர். ஆனால் பல்கேரியாவில் மோசமான டவர் உள்ள இடத்தில் அஜித் இருந்ததால் அவரால் பகல் முழுவதும் ஷாலினியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
கடைசியில் நள்ளிரவுதான் டவர் சிக்னல் கிடைத்து அஜித், ஷாலினி வீடியோ காலில் மனம் திறந்து தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்களாம். எந்த வருடமும் இல்லாதவகையில் இந்த ஆண்டு மறக்க முடியாத திருமண நாளாக இந்த ஆதர்ஷ தம்பதிக்கு அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com