மனைவியை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த அஜித்.. ஷாலினி வெளியிட்ட புகைப்படம்
- IndiaGlitz, [Sunday,November 27 2022]
நடிகர் அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்றாலும் சமீபத்தில் அவருடைய மனைவி ஷாலினி அஜீத் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பதும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த முதல் புகைப்படம் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டாவது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் என்ற நகரில் மனைவியை கட்டிப் பிடித்தவாறு அஜித் இருக்கும் காட்சி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோன்று இன்னும் பல புகைப்படங்களை ஷாலினி அஜித் அடுத்தடுத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஷாலினி அஜீத்தின் பக்கத்திற்கு ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அவருடைய பக்கத்தில் 44000 ஃபாலோயர்கள் தற்போது உள்ளனர்.