மாறி மாறி கேக் ஊட்டிக்கொண்ட அஜித்-ஷாலினி.. என்ன விசேஷம்? வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து இன்று என்ன விசேஷம்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
நடிகர் அஜித் ’அமர்க்களம்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ஷாலினியை காதலித்தார் என்பதும், அதன் பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அஜித், ஷாலினிக்கு திருமணம் ஆகி 24 ஆவது திருமண நாள் விரைவில் வர இருக்கும் நிலையில் இன்று திடீரென இருவரும் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கேக் ஊட்டிக்கொண்டனர்.
அஜித், ஷாலினியிடம் முதன்முதலில் காதல் புரபோஸ் செய்த தினம் இன்று தான் என்றும் இது நடந்த 25 ஆண்டுகள் ஆகிறதை அடுத்து கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது. அஜித் ஷாலினிக்கும், ஷாலினி அஜித்துக்கும் கேக் கூடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் 25 ஆண்டுகால காதல் வாழ்க்கைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ என்ற பாடலின் பின்னணியில் நடந்த இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Ajithkumar sir and #Shalini mam Recent celebration of the love anniversary
— Siraj (@ssiraj1986) March 17, 2024
Celebrating 25 years of togetherness on March 21❤️#25YearsOfTogetherness@iam_SJSuryah@Adhikravi @ajithFC pic.twitter.com/o0yTkLS35U
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments