close
Choose your channels

அஜித் படத்தில் இணைகிறாரா மோகன்லால்? மாஸ் புகைப்படம் வைரல்..!

Monday, September 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் மற்றும் மோகன்லால் இணைந்த புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இருவரும் ஒரே படத்தில் இணைகிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான அஜித் மற்றும் மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான மோகன்லால் ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று கடந்த சில மணி நேரங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்களா? அல்லது அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தில் மோகன்லால் இணைகிறாரா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இருப்பினும் இருவரும் இணைந்து நடிப்பது குறித்த எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என்பதால் இந்த புகைப்படம் மரியாதை நிமித்தமாக எடுக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

அஜித் ஏற்கனவே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் மோகன்லால் உடன் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் நடிகர் மோகன்லால் ரஜினியுடன் 'ஜெயிலர்’ கமல்ஹாசன் உடன் ’உன்னை போல் ஒருவன்’ விஜய்யுடன் ’ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் அஜித்துடன் இணைந்து விரைவில் நடிப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் அஜித் நடிக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment