'என்ன ஒரு ஆனந்தம்'... ஒரே காஸ்ட்யூமில் அஜித்-மஞ்சுவாரியர்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Friday,January 13 2023]

அஜித்தின் ’துணிவு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை விறுவிறுப்பாக எந்த இடத்திலும் திரைக்கதை தொய்வு இல்லாமல் சென்றதாக விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு அஜித்துக்கு இணையாக நடிகை மஞ்சுவாரியரின் கேரக்டர் அமைந்தது என்பதும் அவருக்கு நிச்சயம் இந்த படம் தமிழ் திரை உலகில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மஞ்சு வாரியார் தனது சமூக வலைதளத்தில் அஜித்டன் இணைந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அஜித்துடன் இருக்கும் இந்த புகைப்படங்களில் அவர் ஆனந்தமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

மேலும் அஜித், மஞ்சுவாரியர் இருவரும் ஒரே வெள்ளை நிற காஸ்ட்யூமில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.