சென்னையில் அஜித்-போனிகபூர் சந்திப்பு. அடுத்த பட ஆலோசனையா?

  • IndiaGlitz, [Wednesday,November 14 2018]

அஜித் நடித்துள்ள  'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு போனிகபூர் சென்னை வந்தார். சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஜித்-போனிகபூர் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது இயக்குனர் ஹெச்.வினோத் இருந்ததாகவும் செய்திகள் வந்துள்ளது. 

அஜித்-போனிகபூர்-வினோத் இணையும் இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்றும், தமிழுக்கு ஏற்றவாறு இயக்குனர் ஹெச்.வினோத் இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் நேற்றைய சந்திப்பில் அஜித் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது .