'ஏகே 63' படத்தை தயாரிக்க இருப்பது இந்த பிரபல நிறுவனமா? மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,November 23 2023]

அஜித் நடித்து வரும் 63 வது படமான ’விடாமுயற்சி’ படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தென்னிந்திய திரையுலகின் முன்னணி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘ஏகே 64’ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் திரைப்படத்தை தென்னிந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்நிறுவனம் ஏற்கனவே தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பாக ’புஷ்பா’, ‘புஷ்பா 2’ ‘குஷி’ உட்பட பல வெற்றி திரைப்படங்களை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் தற்போது பவன் கல்யாண் நடித்து வரும் ‘உஸ்தாத் பகத்சிங்’, ரவி தேஜா நடித்து வரும் ’RT4GM’ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் அஜித் படத்தை தயாரிக்க இருப்பதாக வெளியான தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.