அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் இந்த பிரபலங்கள் தான் வில்லனா? மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் 63 வது திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்ததாகவும் இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜீத் ஜோடியாக ’கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடித்த தபு மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு நாயகி இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர்தான் ஸ் ஸ்ரீநிதி ஷெட்டி என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் வில்லன் கேரக்டர் மிகவும் மாஸாக இருப்பதாகவும் அதனால் வில்லன் கேரக்டரில் நடிக்க எஸ்ஜே சூர்யா மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த ’வாலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்து கசிந்து கொண்டிருக்கும் தகவலை பார்க்கும்போது பிரமாண்டமாக உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.