மீண்டும் அஜீத்தை இயக்குகிறாரா இயக்குனர் சிவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'வேதாளம்' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் 'வீரம்' சிவா, இந்த படம் குறித்து கூறிய சில விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மற்ற படங்களைவிட 'வேதாளம்' படத்திற்கு அதிகபட்ச உழைப்பை தந்துள்ளதாகவும், குறிப்பாக இத்தாலி நாட்டில் கப்பலில் நடைபெற்ற ஆக்சன் காட்சிகளில் நடித்த அனுபவங்களை தன்னால் மறக்க முடியாது என்று அஜீத் கூறியதாகவும், இந்த படத்தில் அஜீத் 'தரலோக்கல்' கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளதாகவும், அந்த கேரக்டர் படத்தில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
வீரம்' படத்தை இயக்கி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நாம் கண்டிப்பாக இணைவோம் என்று அஜீத் கூறியதாகவும், அவர் கூறியதுபோலவே 'வேதாளம்' படத்தில் தாங்கள் இருவரும் இணைந்துள்ளதாகவும் கூறியுள்ள இயக்குனர் சிவா, அதேபோல் இந்த படம் முடிந்த பின்னரும் மீண்டும் ஒருமுறை நாம் இணைவோம் என்று அஜீத் கூறியதாகவும், அவர் கூறவுள்ள அந்த நாளுக்காக தான் காத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments