மீண்டும் அஜீத்தை இயக்குகிறாரா இயக்குனர் சிவா?

  • IndiaGlitz, [Thursday,November 05 2015]

அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'வேதாளம்' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் 'வீரம்' சிவா, இந்த படம் குறித்து கூறிய சில விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மற்ற படங்களைவிட 'வேதாளம்' படத்திற்கு அதிகபட்ச உழைப்பை தந்துள்ளதாகவும், குறிப்பாக இத்தாலி நாட்டில் கப்பலில் நடைபெற்ற ஆக்சன் காட்சிகளில் நடித்த அனுபவங்களை தன்னால் மறக்க முடியாது என்று அஜீத் கூறியதாகவும், இந்த படத்தில் அஜீத் 'தரலோக்கல்' கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளதாகவும், அந்த கேரக்டர் படத்தில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

வீரம்' படத்தை இயக்கி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நாம் கண்டிப்பாக இணைவோம் என்று அஜீத் கூறியதாகவும், அவர் கூறியதுபோலவே 'வேதாளம்' படத்தில் தாங்கள் இருவரும் இணைந்துள்ளதாகவும் கூறியுள்ள இயக்குனர் சிவா, அதேபோல் இந்த படம் முடிந்த பின்னரும் மீண்டும் ஒருமுறை நாம் இணைவோம் என்று அஜீத் கூறியதாகவும், அவர் கூறவுள்ள அந்த நாளுக்காக தான் காத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

More News

அஜீத் போன்று ஒரு அண்ணன். இளம்பெண்களை ஏங்கவைக்குமா 'வேதாளம்'?

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அஜீத் ரசிகர்கள் முதல் நாளிலேயே இந்த படத்தை பார்க்க டிக்கெட்டுக்களை வாங்கி வைத்துள்ளனர்...

'ஓகே கண்மணி' நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்

துல்கார் சல்மான், நித்யாமேனன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் பிரபுலட்சுமணன்...

'அரண்மனை 2' வதந்திகளுக்கு குஷ்பு விளக்கம்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டதாகவும் இந்த படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளதாகவும்...

'பிரேமம்' படத்தை ரீமேக் செய்வாரா செல்வராகவன்?

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'பிரேமம்' திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது...

இரண்டு படங்களில் ஒரே கேரக்டரில் நடிக்கும் நிகில்கல்ராணி

ஜி.வி.பிரகாஷுடன் ''டார்லிங்'' படத்தில் நடித்த நடிகை நிகில்கல்ராணி, தற்போது பாபிசிம்ஹாவின் ''கோ 2'' படத்தில் பத்திரிகை நிருபராக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு...