அதே தயாரிப்பாளர்.. அதே இயக்குனர்.. அஜித்தின் 64வது படம் குறித்த தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் இதற்கு முன் அவரை இயக்கிய இயக்குனர் இயக்க இருப்பதாகவும் இதற்கு முன் அவரது படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் அஜித் தற்போது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடா முயற்சி’ மற்றும் மைத்ரி மூவி நிறுவனத்தின் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் அவர் மாறி மாறி நடிக்க இருப்பதாகவும் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஜித்தின் 64வது படம் குறித்து தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அஜித்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித் நடித்த ’வீரம்’ ’வேதாளம்’ ’விவேகம்’ ’விஸ்வாசம்’ ஆகிய நான்கு படங்களை இயக்கிய நிலையில் இருவரும் ஐந்தாவது முறையாக இணையுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்நிறுவனம் ஏற்கனவே அஜித் நடித்த ’விவேகம்’ ’விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout