close
Choose your channels

'அஜித் 62' படத்தின் நாயகி இவரா? 6 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைகிறாரா?

Tuesday, February 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் 62வது படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அஜித் ஜோடியாக நடிக்கும் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

’அஜீத் 62’ படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தபோது நயன்தாரா நாயகி ஆக நடிப்பார் என்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ’அஜித் 62’ படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்றும் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு அஜித் நடித்த ’விவேகம்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

தற்போது காஜல் அகர்வால், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்படஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் ’அஜித் 62’ படத்தில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் ’அஜித் 62’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் இன்னும் ஓரிரு நாளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment