வங்கி கொள்ளைக்கு தயாரான அஜித்: இன்று முதல் 'அஜித் 61' படப்பிடிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு தயாராக இருந்தது என்பதும் அந்த செட்டில் முக்கியமாக ஒரு வங்கி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கியில் தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்பதும் வங்கி கொள்ளை அடிக்க அஜித் செய்யும் முயற்சியை காவல்துறையினர் தடுத்தார்களா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப்படத்தின் கதைக்காக இயக்குனர் எச்.வினோத் பல ஆய்வுகள் செய்து திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்திருப்பதாகவும் இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராய், தபு போன்றவர்கள் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் தவறு என்றும் இந்த படத்திற்காக தென்னிந்திய நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் ஒரு மாதம் இந்த செட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்பதும் போனிகபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout