'அஜித் 61' பட பூஜை புகைப்படத்தை வெளியிட்ட போனிகபூர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த இருக்கும் 61வது திரைப்படமான ’அஜித் 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய படங்களை அடுத்து அஜித், எச் வினோத், போனிகபூர் ஆகிய மூவரும் இணையும் மூன்றாவது திரைப்படம் ’அஜித் 61’. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த இந்த பூஜையை அடுத்து அங்கு தயாராக இருந்த சென்னை அண்ணாசாலை செட்டில் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் ’அஜித் 61’ படத்தின் பூஜை குறித்த புகைப்படத்தை போனிகபூர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் போனிகபூர் இயக்குனர் வினோத் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘அஜித் 61’ படக்குழுவில் இணைந்தவர்கள் குறித்த தகவல் கசிந்துள்ள நிலையில் அந்த தகவல் இதோ:
திரைக்கதை மற்றும் இயக்கம் - ஹெச்.வினோத்
ஒளிப்பதிவு – நிரவ் ஷா
இசை- ஜிப்ரான்
எடிட்டர் – விஜய் வெல்லகுட்டி
ஸ்டண்ட்- சுப்ரீம் சுண்டர், திலீப் சுப்பராயன்
சவுண்ட் எபெக்ட்- சிங்க் சினிமாஸ்
விஎஃப் எக்ஸ்- செல்வகுமார்
உதவி இயக்குநர் - சமீர் உல்லா
Here's to another #AjithKumar action adventure! ???? The shoot for #AK61 has begun!??#AjithKumar @BoneyKapoor #HVinoth @BayViewProjOffl @ZeeStudios_ @zeemusicsouth @sureshchandraa #NiravShah @ProRekha @DoneChannel1 pic.twitter.com/cYgTJf5U1a
— BayViewProjectsLLP (@BayViewProjOffl) April 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout