விஜய்-அஜீத்தை பின்னுக்கு தள்ளினாரா பிரசாந்த்?

  • IndiaGlitz, [Sunday,September 20 2015]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல் படமான 'ஜெண்டில்மேன்' படத்தில் இருந்து 'காதலன்', 'இந்தியன்', 'ஜீன்ஸ்' மற்றும் முதல்வன்' ஆகிய படங்களில் அவருக்கு உதவியாளராக இருந்தவர் இயக்குனர் மாதேஷ். இவர் விஜய்யின் 'மதுர', விஜயகாந்தின் 'அரசாங்கம்', உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் 'ஜீன்ஸ்' படத்தில் பணிபுரிந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறினார். 'ஜீன்ஸ்' படத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யாராய் என்பது முதலில் முடிவானது. அதன்பின்னர் ஹீரோ வேடத்தில் நடிக்க மூன்று நடிகர்கள் பரிசீலனையில் இருந்தனர். அவர்கள் விஜய், அஜீத் மற்றும் பிரசாந்த். இந்த மூவரில் பலகட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் அஜீத், விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டு தேர்வு செய்யப்பட்டவர்தான் பிரசாந்த்' என்று கூறினார்.

இவ்வாறு அஜீத், விஜய்க்கு இணையாக பேசப்பட்ட பிரசாந்த் தற்போது இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். பாலிவுட்டில் அக்ஷயகுமார் நடிப்பில் சூப்பர் ஹிட் ஹிட் ஆன 'ஸ்பெஷல் 26' படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை தியாகராஜன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரசாந்த் நடித்து முடித்துள்ள 'சாஹசம்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது