ரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி!

அமிதாப்பச்சன் நடத்தி வரும் குரோர்பதி நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜித்குமார் என்பவர், டி20 குறித்த கேள்வி ஒன்றை பதில் அளிக்காததால் அவருக்கு கிடைக்க வேண்டிய ரூ.7 கோடி மிஸ் ஆனது.

ஆரம்பம் முதலே அருமையாக விளையாடி வந்த அஜித் குமார் ரூ.1 கோடிக்கான கேள்வியின் விடையை சரியாக சொல்லி அந்த பணத்தை உறுதி செய்தார். அடுத்த கேள்வியை அவர் சரியாக பதில் கூறினால் அவருக்கு ரூ.7 கோடி கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்திய நடிகர் அமிதாப்பச்சன், ரூ.7 கோடிக்கான கேள்வியாக டி20 போட்டி குறித்த ஒரு கேள்வியை கேட்டார். ஒரே நாளில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு டி20 போட்டியில் இரண்டிலும் அரைசதம் அடித்த கிரிக்கெட் வீரர் யார்? என்பதே இந்த கேள்வி. இந்த கேள்விக்கான சரியான பதிலை அஜித்குமார் கூறியிருந்தால் அவருக்கு ரூ.7 கோடி கிடைத்திருக்கும். ஆனால் பதில் தெரியாததால் ரூ.1 கோடியுடன் தான் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அவர் கூறியதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார் அமிதாப்பச்சன். இந்த கேள்விக்கு சரியான விடை முகம்மது ஷாஜாத் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித் படம் செய்த அபார சாதனை: டுவிட்டரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

டுவிட்டர் என்ற சமூக வலைத்தளம் கிட்டத்தட்ட அஜித் ரசிகர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது என்றே சொல்லலாம். அஜித் படத்தின் அறிவிப்பு வெளிவரும்போதும்,

10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்! வைரலாகும் வீடியோ

பெரியவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே சில சமயம் டென்ஷன் ஆகிற நிலையில் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு

பிகிலை அடுத்து தமிழில் வெளியாகும் கால்பந்து திரைப்படம்!

பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தளபதி விஜய் மற்றும் அட்லி

பிரபல தமிழ்ப்பட நடிகருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக புரமோஷன் பெற்ற பல நடிகர்களில் ஒருவர் பாபிசிம்ஹா. பீட்சா, சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா, சாமி 2

தலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூங்கும் போது தலைக்கு அருகில் தனது மொபைல் போனை சார்ஜ் போட்டு இருந்த நிலையில் அந்த மொபைல் போன் திடீரென வெடித்து சிதறியதில்