'கோப்ரா' பட ரிலீஸ்: ரசிகர்களிடம் திடீரென மன்னிப்பு கேட்ட அஜய் ஞானமுத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்த ’கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 31 என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’கோப்ரா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை, கோவை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விக்ரம் மற்றும் படக்குழுவினர் புரமோஷன் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இதுவரை நடந்த எந்த புரமோஷனிலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிய நிலையில் இதற்காக ரசிகர்களிடம் அவர் மன்னிப்பை தெரிவித்துள்ளார்.
’கோப்ரா’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் தான் பிசியாக இருப்பதால் தன்னால் புரமோஷன் பணிகளில் ஈடுபட முடியவில்லை என்றும் ஆனால் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, விக்ரம் உள்ளிட்டோர் புரமோஷன் பணிகளில் ஈடுபடுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
Apologies!! I shall be joining soon!! Caught up with the final works of the film !! But super happy seeing my amazinggggg team @SrinidhiShetty7 @mirnaliniravi @MeenakshiGovin2 @roshanmathew22 slaying it with our King #Cobra @chiyaan sir ???? https://t.co/bT4AiW1mDo
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) August 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments