கமல், மணிரத்னம் படங்களுக்கு பணி செய்யும் பிரபல நடிகரின் நிறுவனம்

கோலிவுட் திரையுலகில் உருவாகி வரும் பிரமாண்ட படங்களில் கமலஹாசனின் ’இந்தியன் 2’ மற்றும் மணிரத்னம் அவர்களின் ’பொன்னியின் செல்வன்’ ஆகியவை என்பது தெரிந்ததே. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் பிரபல நடிகரின் நிறுவனம் ஒன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை செய்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘இந்தியன் 2’ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது நடை பெறவில்லை என்றாலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளில் பணிகள் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் அவர்களின் VFX நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக அந்நிறுவனத்தின் சூப்பர்வைசர் தெரிவித்துள்ளார். ‘இந்தியன் 2’ மற்றும் பொன்னியின் செல்வன் படங்களின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் பணிகள் முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் ‘இந்தியன் 2’ மற்றும் பொன்னியின் செல்வன் படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இரண்டு படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

More News

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவா?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும்

சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய 'மாஸ்டர்' நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு

மணி ஹெய்ஸ்ட் தமிழ் நடிகர்கள் வீடியோ இதோ:

ஓடிடி பிளாட்பாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் மணி ஹெய்ஸ்ட்' சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 700க்கும் அதிகமாகவும், சென்னையில் 500க்கும் அதிகமாகவும் இருந்த நிலையில்

தமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்!

தமிழக-கேரள எல்லையில் ஒரு திருமணம் நடந்ததாகவும் அந்த திருமணம் முடிந்த பின்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் அவரவர் வீட்டிற்கு சென்றதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது