'இந்தியன் 2' படத்தில் இணையும் பாலிவுட் பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,July 03 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் பணி, பிக்பாஸ் பணி ஆகியவற்றோடு தனது அடுத்தடுத்த படங்களின் பணிகளையும் கவனித்து வருகிறார். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தனது இயக்கத்தில் உருவான 'விஸ்வரூபம் 2' படத்தை ரிலீஸ் செய்யும் கமல், பிக்பாஸ் முடிந்தவுடன் 'சபாஷ் நாயுடு திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுவிட்டது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சிவகுமார் ஆகியோர் வசனம் எழுதவுள்ளனர்.

இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் தான் இருப்பதாகவும் இருப்பினும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.