எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் ஹீரோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் ஹீரோக்கள் தென்னிந்திய படங்களில் நடிப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை அடுத்து ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துவரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்.’ இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான அலியாபட், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல ஹீரோ அஜய் தேவ்கான் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தின் இந்தி ரீமேக் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் அவரது படத்தில் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அஜய்தேவ்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக அதிகாரபூர்வமாக ’ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் அறிவித்துள்ளனர் இந்தப்படத்தில் பிரபலங்கள் இணைந்து கொண்டு வருவதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
My association with @SSRajamouli Sir dates back to 2012. We’ve collaborated in many interesting ways since. Working with him in #RRR is an honour & pleasure. https://t.co/G88HeNAVLG
— Ajay Devgn (@ajaydevgn) January 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com